Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசிய உள்துறை அமைச்சருக்குக் கிருமித்தொற்று - நோய் தொற்றியிருக்கும் 3ஆவது அமைச்சர்

மலேசிய உள்துறை அமைச்சர் ஹம்ஸா ஸைனுதீனுக்குக் (Hamzah Zainudin) கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
மலேசிய உள்துறை அமைச்சருக்குக் கிருமித்தொற்று - நோய் தொற்றியிருக்கும் 3ஆவது அமைச்சர்

(படம்: Bernama)

மலேசிய உள்துறை அமைச்சர் ஹம்ஸா ஸைனுதீனுக்குக் (Hamzah Zainudin) கொரோனா கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

4 நாள்களில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் மூன்றாவது அமைச்சர் அவர்.

திரு. ஹம்ஸாவிற்கு நேற்று COVID-19 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், கிருமித்தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டதாகவும் உள்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

அவர் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதார அமைச்சால் கண்காணிக்கப்படுவார்.

ஜனவரி 8 முதல் 11ஆம் தேதி வரை, அமைச்சருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரும் உள்ளூர் சுகாதாரத் துறையின் பரிசோதனை நிலையத்திற்கு வந்து COVID-19 பரிசோதனையை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மகளிர், குடும்ப, சமுதாய மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரினா முகமது ஹாரூனுக்கு (Rina Mohd Harun) நேற்று முன் தினம் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது.

பிரதமர் அலுவலக அமைச்சர் முஸ்தபா முகமதுக்கு (Mustapa Mohamed) சனிக்கிழமை (ஜனவரி 9) நோய்த்தொற்று உறுதியானது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்