Images
  • vaccine picture
    (படம்: REUTERS)

5 நிறுவனங்களிடமிருந்து, 24 மில்லியன் முறை போடுவதற்கான தடுப்பு மருந்துகளை வாங்க மலேசியா ஒப்பந்தம்

மலேசியாவின் Pharmaniaga மருந்தாக்கக் குழுமம், சீனாவின் Sinovac நிறுவனத்திடமிருந்து தடுப்பு மருந்தை வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

எதிர்காலத்தில் அந்த மருந்தை உள்ளூர் அளவில் தயாரிப்பதும் ஒப்பந்தத்தின் அம்சங்களில் ஒன்று.

Sinovac நிறுவனத்திடமிருந்து தடுப்பு மருந்தைப் பெற்று உள்ளூரிலேயே அவற்றைக் குப்பிகளில் அடைத்து பெட்டிகளில் அடுக்கி வைக்க Pharmaniaga குழுமம் திட்டமிட்டுள்ளது.

சீனாவின் Sinovac, CanSino Biologics, ரஷ்யாவின் Sputnik V தடுப்பு மருந்தைத் தயாரிக்கும் Gamaleya கழகம் ஆகியவற்றிடமிருந்து, சுமார் 23.9 மில்லியன் முறை போடக்கூடிய தடுப்பு மருந்துகளைப் பெறுவதற்கான ஒப்பந்தங்கள் குறித்து மலேசியா கலந்துரையாடி வருகிறது.

அத்துடன், Pfizer, BioNTech, AstraZeneca ஆகிய நிறுவனங்களிடமிருந்தும் கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை மலேசியா கொள்முதல் செய்துள்ளது. 

Top