Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியாவில் புதிதாகச் சுமார் 3,000 பேருக்குக் கிருமித்தொற்று

மலேசியாவில் புதிதாகச் சுமார் 3,000 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

மலேசியாவில் புதிதாகச் சுமார் 3,000 பேருக்குக் கிருமித்தொற்று உறுதியானதாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று அங்கு நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு இரண்டாவது முறையாக நடப்புக்கு வந்தது.

பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 30 விழுக்காட்டினர், சிலாங்கூர், கோலாலம்பூர் (Kuala Lumpur) உள்ளிட்ட கிள்ளான் பள்ளத்தாக்கைச் (Klang Valley) சேர்ந்தவர்கள்.

ஜொகூரில் 535 பேரும் சபாவில் (Sabah) 450 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவ்விரு இடங்களிலும் நால்வர் கிருமித்தொற்றால் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

மேலும் 11 இடங்களில் அதிகமானோருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவ்விடங்களையும் சேர்த்து மொத்தம் 270 இடங்களில் கிருமித்தொற்று வெகுவாகப் பரவி வருகிறது.

பினாங்கு (Penang), சிலாங்கூர், மலாக்கா (Melaka), ஜொகூர், சபா ஆகிய மாநிலங்கள், மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின்கீழ் உள்ளன.

கோலாலம்பூர், புத்ராஜெயா (Putrajaya), லபூவான் (Labuan) ஆகிய பகுதிகளில், வட்டாரங்களுக்கு இடையிலான பயணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்