Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியாவில் அதிகரித்துவரும் கிருமித்தொற்றுச் சம்பவங்கள்; கட்டுப்பாடுகள் மறுஆய்வு செய்யப்படும்

மலேசியாவில் அதிகரித்துவரும் கிருமித்தொற்றுச் சம்பவங்களால் நெருக்கடி நிலை உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

மலேசியாவில் அதிகரித்துவரும் கிருமித்தொற்றுச் சம்பவங்களால் நெருக்கடி நிலை உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மை வாரங்களில் அங்கு புதிதாகக் கிருமித்தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை கூடியுள்ளது.

நேற்று முன்தினம் கிருமித்தொற்றால் புதிதாகப் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,788ஆகப் பதிவானது.

சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா (Noor Hisham Abdullah) ஒவ்வொருவரும் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் தடுப்பு மருந்து போட்டுக்கொள்வதும் அவசியம் என்றார் அவர்.

இதற்கிடையே, மலேசியப் பிரதமர் முஹிதீன் யாசின் (Muhyiddin Yassin), மலேசிய அரசாங்கம் COVID-19 விதிமுறைகளை மறுஆய்வு செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

கிருமிப்பரவலைக் கட்டுப்படுத்த அடிப்படைச் செயல்பாட்டு நடைமுறைகள் சரிவர செயல்படுத்தப்படுவதை உறுதிசெய்வது அவசியம் என்றார் அவர்.

தமது நிர்வாகம் கிருமிப்பரவல் அதிகம் உள்ள இடங்களை முன்கூட்டியே அடையாளம் காணும் கட்டமைப்பைக் கொண்டுள்ளது என்றும் திரு. முஹிதீன் கூறினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்