Images
  • msia
    (படம்: Reuters/Lim Huey Teng)

COVID-19: மலேசியாவில் புதிதாகச் சுமார் 1,200 பேருக்குக் கிருமித்தொற்று; ஐவர் மரணம்

மலேசியாவில் புதிதாக 1,210 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் 499 சம்பவங்கள் சபா மாநிலத்தில் பதிவாகின.

சிலாங்கூரில் 259 பேரும், கோலாலம்பூரில் 238 பேரும் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

எஞ்சிய சம்பவங்கள் நெகிரி செம்பிலான், பேராக், பினாங்கு, கிளாந்தான், ஜொகூர், கெடா, மலாக்கா ஆகிய மாநிலங்களில் பதிவாகின.

மலேசியாவில் உள்ள 162 கிருமித்தொற்றுக் குழுமங்களில், 72 வேலை இடங்களுடன் தொடர்புடையவை என அந்நாட்டின் சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

மேலும் 5 பேர் கிருமித்தொற்றால் மாண்டனர்.

மலேசியாவில் கிருமித்தொற்றால் மாண்டோரின் மொத்த எண்ணிக்கை 318க்கு உயர்ந்தது.

இதுவரை மொத்தம் 49,730 பேர் பாதிக்கப்பட்டனர்.

Top