Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியாவில் ஒரே நாளில் 869 கிருமித்தொற்றுச் சம்பவங்கள்; 4 மரணங்கள்

மலேசியாவில் இதுவரை இல்லாத அளவில், ஒரே நாளில் 869 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவானதாக அந்நாட்டுச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வாசிப்புநேரம் -
மலேசியாவில் ஒரே நாளில் 869 கிருமித்தொற்றுச் சம்பவங்கள்; 4 மரணங்கள்

(கோப்புப் படம்: REUTERS/Lim Huey Teng)

மலேசியாவில் இதுவரை இல்லாத அளவில், ஒரே நாளில் 869 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவானதாக அந்நாட்டுச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அனைத்துப் புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்களும் உள்ளூர் அளவில் பரவியதாகச் சுகாதாரப் பொது இயக்குநர் நூர் ஹிஷாம் அப்துல்லா (Noor Hisham Abdullah) கூறினார்.

அவற்றில் பெரும்பகுதி சபா மாநிலத்தில் பதிவாயின.

கடந்த 24 மணிநேரத்தில், சுமார் 450 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் அங்குப் பதிவாகின.

மேலும், 4 பேர் கிருமித்தொற்றால் மாண்டனர்.

நேற்றோடு ஒப்பிடுகையில், கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.

மலேசியாவில் சுமார் 19,600 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

180 பேர் மாண்டனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்