Images
  • Picture Story Malaysia
    (கோப்புப்படம்: AFP / Mohd RASFAN)

மலேசியாவில் ஒரே நாளில் 871 பேருக்குக் கிருமித்தொற்று - மேலும் 7 பேர் மரணம்

மலேசியாவில் ஒரே நாளில் 871 பேருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

நேற்று பதிவான எண்ணிக்கையைவிட அது அதிகம்.

புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்போலோர் உள்ளூரிலேயே கிருமித்தொற்றுக்கு ஆளாயினர்.

மேலும் 7 பேர் மாண்டனர். அவர்களையும் சேர்த்து மலேசியாவில் கிருமித்தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 187க்கு உயர்ந்துள்ளது.

சபா மாநிலத்தில், இதுவரை இல்லாத அளவில், 702 பேருக்கு நோய்த்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது. சிலாங்கூரில் 77 பேரும், பினாங்கில் 45 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிருமிப்பரவல் அதிகரித்துள்ளதால், கோலாலம்பூர், சிலாங்கூர், புத்ரஜெயா ஆகிய வட்டாரங்களில் இம்மாதம் 27ஆம் தேதி வரை நடமாட்டக் கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

மலேசியாவில் சுமார் 20,490 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டனர். 

Top