Images
  • malaysia covid (1)
    (கோப்புப் படம்: AFP/Mohd Rasfan) 

ஜொகூர் உள்ளிட்ட 4 மாநிலங்களில் கட்டுப்பாடுகளைத் தளர்த்துகிறது மலேசியா

மலேசியாவில், கெடா, ஜொகூர் உள்ளிட்ட 4 மாநிலங்களில் நடமாட்டக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படவுள்ளன.

திட்டமிட்டதற்கு 2 வாரங்கள் முன்னதாகவே கட்டுப்பாடுகளை அரசாங்கம் தளர்த்தவுள்ளது.

எனினும், கிளந்தான் மாநிலத்தில் முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

கிளந்தானின் பல வட்டாரங்களில், 40க்கும் அதிகமான கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவானதைத் தொடர்ந்து, அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தலைநகர் கோலாலம்பூர் உட்பட சில பகுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள், COVID-19 பரிசோதனைகளுக்குச் செல்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களிடையே அதிகமான நோய்ச் சம்பவங்கள் பதிவாகியது அதற்குக் காரணம்.

ஆனால், இல்லப் பணிப்பெண்கள் அந்தக் கட்டாயச் சோதனைகளுக்குச் செல்லத் தேவையில்லை.

இந்நிலையில், கிருமித்தொற்றை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு இடையே மக்கள் நாளை முதல் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நோய்ப்பரவலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள உள்ளூர்ச் சுற்றுலாத் துறைக்கு ஊக்கமளிக்கும் முயற்சிகளில் அதுவும் ஒன்று.

Top