Images
  • msia doctors strike
    (படம்: ARIF KARTONO / AFP)

மலேசியாவில், இளம் மருத்துவர்கள் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம்

மலேசியாவில், இளம் மருத்துவர்கள் ஆயிரக்கணக்கானோர் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

நாடு முழுவதும் உள்ள மருத்துவ வசதிகளுக்கு வெளியே நின்று அவர்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

மலேசியாவில் இளம் மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

வேலைக்கு உத்தரவாதம் இல்லை, முறையான சலுகைகள் வழங்கப்படவில்லை என்பதை அவர்கள் சுட்டினர்.

கிருமிப்பரவல் நீடிக்கும் சூழலில், இளம் மருத்துவர்களுக்கான வேலை ஒப்பந்தத்தை மலேசிய அரசாங்கம் நீட்டித்துள்ளது.

ஆனால், அதுமட்டும் போதாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

-AFP 

Top