Images
  • msia police
    (படம்: AFP/Manan Vatsyayana)

மலேசியா: கைவிடப்பட்ட வாகனமொன்றில் 5.6 மில்லியன் வெள்ளி மதிப்புமிக்க போதைப் பொருள் கண்டுபிடிப்பு

மலேசியாவின் கிளந்தான் (Kelantan) மாநிலக் காவல்துறை அதிகாரிகள் 584 கிலோகிராம் எடைகொண்ட Methamphetamine போதைப் பொருளைக் கைப்பற்றியுள்ளனர்.

அதன் மதிப்பு சுமார் 5.6 மில்லியன் வெள்ளி.

பூட்டிய நிலையில் கைவிடப்பட்டிருந்த வாகனமொன்றில் அந்தப் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.

மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பின் அதிகாரிகள் முன்னதாக அந்தக் காரைத் துரத்திச் சென்றனர்.

அவர்களிடம் தப்பித்த காரின் ஓட்டுநர் பின்னர் Cherang Melintang வனப்பகுதிக்கு அருகே அதனைக் கைவிட்டுச் சென்றதாகக் கூறப்பட்டது. 

Top