Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பாசிர் கூடாங்கில் நச்சுவாயுக் கசிவு - 111 பள்ளிக்கூடங்கள் மூடல்

ஜொகூரின் பாசிர் கூடாங்கில் ஏற்பட்டுள்ள இரசாயனக் கழிவுச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த நகரில் உள்ள அனைத்து 111 பள்ளிகளையும் மூடுவதற்கு, மலேசிய கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
பாசிர் கூடாங்கில் நச்சுவாயுக் கசிவு - 111 பள்ளிக்கூடங்கள் மூடல்

(படம்: Bernama)

ஜொகூரின் பாசிர் கூடாங்கில் ஏற்பட்டுள்ள இரசாயனக் கழிவுச் சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த நகரில் உள்ள அனைத்து 111 பள்ளிகளையும் மூடுவதற்கு, மலேசிய கல்வி அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

Methane நச்சு வாயு கசிவால், நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி, சுமார் 500 பேருக்கு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தன.

அவர்களில் குறைந்தது 9 பேர் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அந்த நச்சு வாயு கசிவு சம்பவத்தின் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களில் ஒருவர்-மீது இன்று குற்றஞ்சாட்டப்படலாம்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 5 ஆண்டு சிறைத்தண்டனையும், 500,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படலாம்.

இந்நிலையில், அந்த நச்சு வாயு கசிவு சம்பவத்தால் மாணவர் ஒருவர் மாண்டதாகப் பரவி வரும் செய்தி, பொய்யதானது என்று மலேசிய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுவரை அந்தச் சம்பவத்தின் தொடர்பில் எந்த மரணமும் பதிவாகவில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்