Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியப் பிரதமர் முஹிதீன் யாசினுக்கு COVID-19 நோய்த்தொற்று இல்லை

மலேசியப் பிரதமர் முஹிதீன் யாசினுக்கு COVID-19 நோய்த்தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

மலேசியப் பிரதமர் முஹிதீன் யாசினுக்கு COVID-19 நோய்த்தொற்று இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டாவது முறை நடத்தப்பட்ட சோதனையில் அது தெளிவானது.

அதோடு, 14 நாள்கள் சுயமாகத் தனிமைப்படுத்திக் கொள்ளும் நடைமுறையை அவர் நிறைவுசெய்துள்ளார்.

நேற்றோடு அந்த நடைமுறை முடிவுக்கு வந்ததாகத் திரு. முஹிதீனின் அலுவலகம் தெரிவித்தது.

நேற்று முன்தினம் அவருக்குச் சுகாதார அமைச்சு மீண்டும் சோதனை நடத்தியது.

கிருமித்தொற்று இல்லை என்பது அதில் தெரியவந்த போதும் முன்னெச்சரிக்கையாக இன்று காலை காணொளிச் சந்திப்பு வழி COVID-19 பற்றிய தேசியப் பாதுகாப்பு மன்றச் சிறப்புக் கூட்டத்தை அவர் நடத்தினார்.

இந்நிலையில், மலேசியாவில் இன்று புதிதாக 869 கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.

அங்கு ஒரே நாளில் பதிவான ஆக அதிகமான எண்ணிக்கை இது.

மேலும் 4 பேர் மாண்டனர்.

அவர்களையும் சேர்த்து மாண்டோர் எண்ணிக்கை 180க்கு உயர்ந்துள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்