Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கிருமித்தொற்றுச் சூழலுக்குப் பின் தண்ணீர் விலையை மறுஆய்வு செய்யும் பேச்சுகளைச் சிங்கப்பூர் - மலேசியா தொடரும்

சிங்கப்பூரும் மலேசியாவும் கிருமித்தொற்றுச் சூழலிலிருந்து முழுமையாக வெளியேறிய பிறகு, தண்ணீர் விலையை மறுஆய்வு செய்யும் பேச்சுகள் தொடரும் என்று மலேசியாவின் சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் துவான் இப்ராஹிம் துவான் மான் (Tuan Ibrahim Tuan Man) கூறியுள்ளார்.

வாசிப்புநேரம் -
கிருமித்தொற்றுச் சூழலுக்குப் பின் தண்ணீர் விலையை மறுஆய்வு செய்யும் பேச்சுகளைச் சிங்கப்பூர் - மலேசியா தொடரும்

(கோப்புப் படம்: Jeremy Long)

சிங்கப்பூரும் மலேசியாவும் கிருமித்தொற்றுச் சூழலிலிருந்து முழுமையாக வெளியேறிய பிறகு, தண்ணீர் விலையை மறுஆய்வு செய்யும் பேச்சுகள் தொடரும் என்று மலேசியாவின் சுற்றுப்புற, நீர்வள அமைச்சர் துவான் இப்ராஹிம் துவான் மான் (Tuan Ibrahim Tuan Man) கூறியுள்ளார்.

அந்த விவகாரத்திற்குத் தீர்வுகாண புத்ரா ஜெயா எடுக்கும் நடவடிக்கைள் பற்றி மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார் (Xavier Jayakumar) கேள்வி எழுப்பியிருந்தார்.

சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் இடையே உள்ள தண்ணீர் விவகாரம் இருநாட்டின் அரசதந்திர உறவுகள் தொடர்பானது என்று அமைச்சர் அதற்கு பதிலளித்தார்.

எனினும் தண்ணீர் விலைகளை மறுஆய்வு செய்வது குறித்து மலேசியாவின் நிலைப்பாடு மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் இருப்பதாக அவர் சொன்னார்.

அதன்படி, 1962 ஜொகூர் ஆற்று நீர் ஒப்பந்தத்தின்கீழ் சிங்கப்பூருக்கு விற்கும் தண்ணீரின் விலையை மறுஆய்வு செய்ய மலேசியாவிற்கு உரிமை இருப்பதே அது.

2018ஆம் ஆண்டிலிருந்து இரு தரப்பும் அது குறித்துப் பேசிவருவதாகத் திரு. துவான் இப்ராஹிம் குறிப்பிட்டார்.

கிருமித்தொற்றுச் சூழலால் அது தற்காலிகமாய் நிறுத்தப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

அந்த நீர் ஒப்பந்தம் 2061ஆம் ஆண்டு காலாவதியாகிறது.

-CNA/am(aw) 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்