Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியாவில் தைப்பூச விதிமுறைகள் உறுதியாகாத நிலையில், நேர்த்திக்கடன்களை முன்கூட்டியே செலுத்தத் தொடங்கியிருக்கும் பக்தர்கள்

மலேசியாவின் பிரபல சுற்றுலாத் தலமும் வழிபாட்டுத் தலமுமான பத்துமலையில், இவ்வாண்டு தைப்பூசத் திருவிழா எந்த அளவுக்குக் கொண்டாடப்படும்? 

வாசிப்புநேரம் -

மலேசியாவின் பிரபல சுற்றுலாத் தலமும் வழிபாட்டுத் தலமுமான பத்துமலையில், இவ்வாண்டு தைப்பூசத் திருவிழா எந்த அளவுக்குக் கொண்டாடப்படும்?

அது குறித்து இன்னும் தெளிவான தகவல் ஏதும் வெளிவரவில்லை.

இந்நிலையில், நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு மீண்டும் பிறப்பிக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் பலர் முன்கூட்டியே தங்களின் நேர்த்திக்கடன்களைப் பத்துமலை கோயிலில் செலுத்தத் தொடங்கிவிட்டனர்.

அதுபற்றி அறிந்துவந்தார் மலேசியாவில் உள்ள 'செய்தி' நிருபர் தனலட்சுமி.

எங்கள் குழந்தைகளுக்காக வேண்டியிருந்தோம். இருப்பினும் தைப்பூசம் நடைபெறுமா என்பதே தெரியவில்லை... அதனால், நாங்கள் முன்கூட்டியே முடிக் காணிக்கைகளைச் செலுத்திவிட்டோம்.

என்று கூறினர் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த வினோத்-நளினி தம்பதி

ஆண்டுதோறும், 30-40 பேர் ஒன்றாகச் சேர்ந்து தைப்பூசத்திற்கு முந்தைய நாள் இரவு பால்குடம் எடுப்போம். ஆனால் கிருமித்தொற்றுச் சூழலால் இந்த ஆண்டு எங்களால் ஒன்றாகச் செய்யமுடியவில்லை. தைப்பூசத் திருவிழா இன்னும் உறுதியாகாத நிலையில், நாங்கள் தனிப்பட்ட முறையில்
நேர்த்திக்கடன்களைச் செலுத்துகிறோம்.

என்று கூறினார், கோலாலம்பூரைச் சேர்ந்த ஜனனி.

தை மாதம் பிறந்த பிறகுதான் நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படவேண்டும்...ஆனால், நிலைமை எப்படி இருக்கும் என்பது தெரியவில்லை. நேர்த்திக்கடன்களை முன்கூட்டியே செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.

என்று கூறினார் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த நந்தினி.

சிலாங்கூர் (selangor) மாநிலத்தில் இவ்வாண்டு தைப்பூசத் திருவிழாக் கொண்டாட்டங்கள் இருக்காது என சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் திரு.வி.கணபதி ராவ் முன்னதாக அறிவித்திருந்தார்.

இருப்பினும், அதன் தொடர்பில் இன்னும் அதிகாரபூர்வ அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.

தேசியப் பாதுகாப்பு மன்றம் எடுக்கும் முடிவே இறுதியானதாக இருக்கும்.

 அதற்காகக் காத்திருக்கிறோம். அதன் முடிவு எதுவாயினும் கோயில் நிர்வாகம் அதற்குக் கட்டுப்படும்.

என்றார் பத்துமலைத் திருத்தலத்தை நிர்வகிக்கும் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானத்தின் கெளரவச் செயலாளர் திரு.கு.சேதுபதி.

பத்துமலையில் தொன்றுதொட்டு தைப்பூசத் திருவிழாவை ஏற்பாடு செய்துவருகிறோம்.

ஒருவேளை தேசியப் பாதுகாப்பு மன்றம், தைப்பூச தினத்தன்று பத்துமலைத் திருத்தலத்திற்குள் பக்தர்களை அனுமதிக்கக்கூடாது என முடிவெடுத்தால், வழிபாடுகள் அனைத்தும் வழக்கம் போல நடைபெறும். ஆனால் அவை பக்தர்களுக்கு இணையம் வாயிலாக நேரலையில் ஒளிபரப்பப்படும்.

என்றார் அவர்.

மலேசியாவில் கிருமித்தொற்று நாளுக்குநாள் அதிகரித்துவருவதால், பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பதில் ஆலய நிர்வாகம் கவனமாக இருக்கிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்