Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா: சுமார் 93 மில்லியன் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கத் திட்டம்

மலேசியாவில் அடுத்த ஆண்டு சுமார் 93 மில்லியன் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -
மலேசியா: சுமார் 93 மில்லியன் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கத் திட்டம்

படம்: AFP

மலேசியாவில் அடுத்த ஆண்டு சுமார் 93 மில்லியன் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மலேசியச் சுற்றுலாத் துறையும் மலேசியா ஏர்லைன்ஸும் இணைந்து அந்த நடவடிக்கையை மேற்கொள்ளவிருக்கின்றன.

உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் சுமார் 77 பில்லியன் ரிங்கிட் செலவு செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆண்டு கிட்டத்தட்ட 85.2 மில்லியன் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மலேசியாவின் பல்வேறு இடங்களுக்குச் சென்றதாகச் சுற்றுலாத்துறை கூறியது.

2020ஆம் ஆண்டில் சுமார் 30 மில்லியன் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க Visit Malaysia 2020 என்ற விளம்பர இயக்கமும் செயல்பட்டு வருகிறது.

மலேசியா ஏர்லைன்ஸ், வரும் 9 ஆம் தேதிக்குள் விமானச் சீட்டுகளுக்கும் ஹோட்டல்களுக்கும் முன்பதிவு செய்வோருக்கு 70 விழுக்காடு வரை சலுகை தருவதாக அறிவித்துள்ளது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்