Images
  • Msia Covid Numbers Ease
    AP Photo/Vincent Thian

கிருமித்தொற்று மோசமடைந்தால் கோலாலம்பூரில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நோய்ச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்தால், அங்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என அந்நாட்டின் மூத்த தற்காப்பு அமைச்சர் எச்சரித்துள்ளார்.

மலேசியத் தலைநகரில் நேற்று மட்டும் 392 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் அந்த எச்சரிக்கையைத் திரு. இஸ்மாயில் சப்ரி (Ismail Sabri) விடுத்துள்ளார்.

அதில் 385 சம்பவங்கள் டமன்சாரா (Damansara) வட்டாரத்தில் உள்ள கட்டுமானத் தளத்தில் நேர்ந்தன.

மலேசியா முழுவதிலும் COVID-19 சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

கடந்த 4 நாள்களாக, ஒவ்வொரு நாளும் 1,000க்கும் அதிகமானோர் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், நோய்ப்பரவலைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்குக், கூடுதல் நடமாட்டக் கட்டுப்பாடுகளை விதிப்பது தீர்வாகாது எனச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Top