Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

டிசம்பர் மாதத்திற்குள் அனைத்துலகச் சுற்றுப் பயணிகளுக்கு எல்லைகளை முழுமையாகத் திறக்கமுடியுமென நம்புகிறோம் - மலேசியப் பயணத்துறை அமைச்சர்

மலேசியா, டிசம்பர் மாதத்திற்குள் அனைத்துலகச் சுற்றுப் பயணிகளுக்கு எல்லைகளை முழுமையாகத் திறக்கமுடியுமென நம்பிக்கை தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -


மலேசியா, டிசம்பர் மாதத்திற்குள் அனைத்துலகச் சுற்றுப் பயணிகளுக்கு எல்லைகளை முழுமையாகத் திறக்கமுடியுமென நம்பிக்கை தெரிவித்துள்ளது.

அந்நாட்டுப் பயணத்துறை அமைச்சர் நான்சி ஷுக்ரி (Nancy Shukri) இன்று நாடாளுமன்றத்தில் அதனைத் தெரிவித்தார்.

அனைத்துலகச் சுற்றுப் பயணிகள் மலேசியாவிற்குள் எப்போது அனுமதிக்கப்படுவார்கள் என்று நாடாளுமன்றத்தில் வினவப்பட்டது.

அதற்கு பதிலளித்த நான்சி,
" தற்போது லங்காவிக்குள் நுழைய அனைத்துலகச் சுற்றுப் பயணிகளுக்கு நவம்பர் 16ஆம் தேதி முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்த முன்னோடித் திட்டம் எப்படிச் செயல்படுகிறது என்பதைப் பொறுத்து மற்ற முடிவுகள் எடுக்கப்படும்" என்றார்.

லங்காவியில், அரசாங்கம் தகுந்த சுகாதாரக் கட்டமைப்புகளை நிறுவியுள்ளதாகவும் அவர் கூறினார்.

நிச்சயமாக டிசம்பர் மாதம் எல்லைகள் திறக்கப்படும் என்று கூறிவிடமுடியாது; ஆனால், அதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும் என்று திருவாட்டி நான்சி நம்பிக்கை தெரிவித்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்