Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பக்கட்டான் ஹரப்பான் கூட்டணி அரசாங்கம், தேர்தல் அறிக்கை வாக்குறுதியை நிறைவேற்றும்: முக்ரீஸ் மகாதீர்

பக்கட்டான் ஹரப்பான் கூட்டணி அரசாங்கம், தனது தேர்தல் அறிக்கை வாக்குறுதியை நிறைவேற்ற ஆன அனைத்தையும் செய்யும் என்று பெர்சாத்து கட்சியின் துணைத் தலைவரான முக்ரீஸ் மகாதீர் கூறியுள்ளார். 

வாசிப்புநேரம் -

பக்கட்டான் ஹரப்பான் கூட்டணி அரசாங்கம், தனது தேர்தல் அறிக்கை வாக்குறுதியை நிறைவேற்ற ஆன அனைத்தையும் செய்யும் என்று பெர்சாத்து கட்சியின் துணைத் தலைவரான முக்ரீஸ் மகாதீர் கூறியுள்ளார்.

அரசாங்கம் ஏற்கனவே சில வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாக கெடா மாநில முதல்வருமான திரு. முக்ரீஸ் சொன்னார்.

தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட அனைத்தும் 100 நாட்களிலேயே நிறைவேற்றப்படும் என பக்கட்டான் ஹரப்பான் கூட்டணி தேர்தலின்போது கூறியிருந்தது.

இருந்தாலும், சில வாக்குறுதிகளை நிறைவேற்ற 100 நாட்களுக்கு மேலாகலாம் என்று திரு. முக்ரீஸ் குறிப்பிட்டார்.

அதை மக்கள் புரிந்துகொள்வார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

எண்ணெய் விலையைக் குறைக்கும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகவும், அதற்கு மக்கள் சிறிது பொறுமையாக இருக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்