Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மும்பையின் சேரிப் பகுதிகளில் வசிக்கும் பாதிப்பேருக்குக் கிருமித்தொற்று:ஆய்வு

மும்பையின் சேரிப் பகுதிகளில் வசிக்கும் பாதிப்பேருக்குக் கிருமித்தொற்று:ஆய்வு

வாசிப்புநேரம் -

மும்பையின் சேரிப் பகுதிகளில் வாழும் கிட்டத்தட்ட பாதிப்பேர் கிருமித்தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலக அளவில் கிருமித்தொற்றால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது.

அங்கு சுமார் ஒன்றரை மில்லியன் பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மும்பையின் சேரிப் பகுதிகளில் வாழும் சுமார் 7,000 பேருக்கு ரத்தப் பரிசோதனை நடத்தப்பட்டது.

அவர்களில் 50 விழுக்காட்டுக்கும் அதிகமானோருக்குக் கிருமி தொற்றியிருப்பது தெரியவந்துள்ளது.

மும்பை மக்கள் தொகையில் சுமார் 40 விழுக்காட்டினர் சேரிகளில் வாழ்கின்றனர்.

அங்கு 110,000 பேருக்குக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

6,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்