Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

விரிவான பசிபிக் பங்காளித்துவ முற்போக்கு உடன்பாட்டை அங்கீகரிக்க மலேசியா அவசரப்படாது

CPTPP எனப்படும் விரிவான பசிபிக் பங்காளித்துவ முற்போக்கு உடன்பாட்டை அங்கீகரிக்க மலேசியா அவசரப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

CPTPP எனப்படும் விரிவான பசிபிக் பங்காளித்துவ முற்போக்கு உடன்பாட்டை அங்கீகரிக்க மலேசியா அவசரப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

South China Morning Post நாளேட்டுக்கு அளித்த நேர்காணலில், மலேசியாவின் அனைத்துலக வர்த்தக, தொழில் அமைச்சர் டெரெல் லெய்கிங் (Darell Leiking) அவ்வாறு கூறினார்.

அந்த உடன்பாடு, சென்ற மாதம் 30ஆம் தேதி நடப்புக்கு வந்தது.

புத்ராஜெயா அதனை அங்கீகரிப்பதற்குத் தடை ஏதுமில்லை. இருப்பினும், பக்கட்டான் ஹரப்பான் கூட்டணி சென்ற மே மாதம்தான் பதவியேற்றதால், அதுகுறித்து முடிவெடுக்கக் கூடுதல் ஆய்வுசெய்யவேண்டியிருப்பதாக மலேசிய அமைச்சர் குறிப்பிட்டார்.

உடன்பாட்டின் அம்சங்கள் மலேசியாவுக்கு நியாயமாக அமைந்திருப்பதை உறுதிசெய்ய அரசாங்கம் விழைவதாக அவர் கூறினார்.

இந்த வார இறுதியில், உடன்பாட்டில் இடம்பெற்றுள்ள 11 நாடுகளின் அமைச்சர்கள் சந்திக்கவிருக்கின்றனர்.

அதற்கு முன்னர் உடன்பாட்டை அங்கீகரிக்க மலேசியாவுக்கு நெருக்குதல் அதிகரித்துவருகிறது.

இதுவரை அந்த உடன்பாட்டிற்கு சிங்கப்பூர் உள்ளிட்ட 6 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்