Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியாவின் புதிய மாமன்னர் குறித்து இன்று தெளிவான தகவல் கிடைக்கும்

மலேசியாவின் புதிய மாமன்னர் யார் என்பது குறித்து இன்று தெளிவான தகவல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாசிப்புநேரம் -

மலேசியாவின் புதிய மாமன்னர் யார் என்பது குறித்து இன்று தெளிவான தகவல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாஹாங் மாநில அரசாங்க உயர் அதிகாரி, அம்மாநில அரசகுடும்பத்தினரைக் கோலாலம்பூரில் சந்தித்துப் பேசிய பிறகு அவ்வாறு குறிப்பிட்டார்.

மலேசியாவின் 15ஆவது மாமன்னராகப் பொறுப்பேற்றிருந்த கிளந்தான் மாநில சுல்தான் ஐந்தாம் முகமது, சென்ற ஞாயிற்றுக்கிழமை, பதவிவிலகினார்.

மலேசியாவின் 9 மாநிலங்களைச் சேர்ந்த சுல்தான்கள், சுழற்சி அடிப்படையில் மாமன்னராகப் பொறுப்பேற்பது வழக்கம்.

அந்த அடிப்படையில், அடுத்து அரியணையேறும் வாய்ப்பு பாஹாங் மாநில சுல்தானைச் சேரும்.

ஆனால் 88 வயது சுல்தான் அஹமட் ஷா உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

மலேசிய அரசமைப்புச் சட்டத்தின் கீழ், புதிய மன்னர் உடல்நலம், மனநலத்துடன் இருக்கவேண்டும் என்பது கட்டாயம்.

எனவே, பஹாங் சுல்தான் அஹமட் ஷா பதவி விலகி, அவரது மூத்த மகன் பாஹாங் துங்கு அப்துல்லா (Pahang Tengku Abdullah) அங்கு பொறுப்பேற்கலாம் என்று நம்பப்படுகிறது. அதன் பின்னர் அவர் மலேசியாவின் மாமன்னராகப் பதவியேற்க அது வழிவகுக்கும்.

இன்று பிற்பகல் பஹாங் அரண்மனை அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடும் என்று மாநிலத் தலைமைச் செயலாளர் கூறினார்.

இம்மாதம் 24ஆம் தேதி புதிய மாமன்னரைத் தெரிவுசெய்ய, 9 மாநில சுல்தான்களின் கூட்டம் நடைபெறும்.

16ஆவது மாமன்னர் இம்மாதம் 31ஆம் தேதி பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்