Images
  • 9May mother suicide (1)

காதலுக்காகப் பள்ளியின் கூரையிலிருந்து குதிக்க முயன்ற மாணவர்

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)


தான் விரும்பிய பெண் தனது காதலை நிராகரித்ததால், பள்ளியின் கூரையிலிருந்து குதிக்க முயன்றுள்ளார் மலேசியாவில் மாணவர் ஒருவர்.

அதிர்ஷ்டவசமாக அவர் குடிமைத் தற்காப்புப் படையினரால் காப்பாற்றப்பட்டார்.

கூரை மீது ஏறிய அந்த மாணவர் பற்றிக் காவல்துறைக்குப் பள்ளி தகவல் தெரிவித்தது. உடனே காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.

கூரையில் இருந்த மாணவருடன் அதிகாரிகள் ஒன்றரை மணி நேரம் பேசிய பிறகு அவர் மீட்கப்பட்டார். அப்போது மாணவருக்குக் கைகளில் லேசான காயங்கள் ஏற்பட்டன.

அந்தச் சம்பவம் காணொளியாக எடுக்கப்பட்டு இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

அமைதியான, நல்லொழுக்கம் கொண்ட மாணவர் அவர் என்று ஆசிரியர்கள் கூறினர்.

சம்பவம் குறித்துக் காவல்துறையிடம், பள்ளியோ மாணவரின் பெற்றோரோ இன்னும் புகார் செய்யவில்லை. 

Top