Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மியன்மாரில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று வர்த்தகங்கள் செயல்பாடுகளை நிறுத்தின

மியன்மாரில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, வர்த்தகங்கள் இன்று செயல்பாடுகளைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளன.

வாசிப்புநேரம் -

மியன்மாரில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, வர்த்தகங்கள் இன்று செயல்பாடுகளைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளன.

உள்ளூர் கடைகள் உள்பட, KFC , Food Panda போன்ற அனைத்துலக நிறுவனங்களும் அவ்வாறு செய்திருக்கின்றன.

இந்நிலையில், ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, இதுவரை இல்லாத அளவில், இன்று பேரணி நடத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் திட்டமிடுகின்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராணுவம் எச்சரித்துள்ளபோதும், யங்கூன் நகரில், ஆயிரக்கணக்கானோர் திரண்டுள்ளனர்.

அங்கு பாதுகாப்புப் படையினருடன், ராணுவ வாகனங்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இன்றைய எதிர்ப்புப் பேரணியை, Five Twos Spring Revolution என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் அழைக்கின்றனர்.

22 பிப்ரவரி 2021 எனும் இன்றைய தேதியை அது குறிக்கிறது.

இருப்பினும், 1988-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 8888 எனும் ஜனநாயகத்துக்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தைப் பிரதிபலிக்கும் வகையில், Five Twos Spring Revolution அமையலாம் எனக் கருதப்படுகிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்