Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மியன்மாரில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றம் அழைப்பு

கடந்த வாரம் ஆசியான் சந்திப்பில் வரையப்பட்ட திட்டத்தைப் பின்பற்றும்படி மன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

வாசிப்புநேரம் -
மியன்மாரில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றம் அழைப்பு

(படம்:Naung Kham)

மியன்மாரில் வன்முறையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர, ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றம் அழைப்பு விடுத்துள்ளது.

கடந்த வாரம் ஆசியான் சந்திப்பில் வரையப்பட்ட திட்டத்தைப் பின்பற்றும்படி மன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

ஆசியான் வெளியிட்ட கூட்டறிக்கையின் பல அம்சங்களுக்கு சீனாவும் ரஷ்யாவும் எதிர்ப்புத் தெரிவித்தன.

அவற்றுக்கு இணங்கிய பின்பே, அந்த முதற்கட்ட கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் மியன்மாரில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

ஆட்சிக்கவிழ்ப்பு தொடங்கியதிலிருந்து குறைந்தது 759 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

- AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்