Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மியன்மாரிலிருந்து கூட்டம் கூட்டமாக எல்லைப் பகுதிகளைக் கடந்துசெல்வோர்

மியன்மாரில் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தப்பட்டு இரண்டு மாதங்களுக்கும் மேலான நிலையில் பலர் அங்கிருந்து வேறு நாடுகளுக்குத் தப்பிச் செல்ல முயற்சி செய்துவருகின்றனர்.

வாசிப்புநேரம் -

மியன்மாரில் ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தப்பட்டு இரண்டு மாதங்களுக்கும் மேலான நிலையில் பலர் அங்கிருந்து வேறு நாடுகளுக்குத் தப்பிச் செல்ல முயற்சி செய்துவருகின்றனர்.

குறிப்பாக இந்தியா, தாய்லந்து ஆகிய அண்டை நாடுகளுக்குச் செல்ல நூற்றுக்கணக்கான மியன்மார் குடிமக்கள் முயற்சி செய்துவருகின்றனர்.

கடந்த சில வாரங்களாக மியன்மாரிலிருந்து பலர் கூட்டம் கூட்டமாக எல்லைப் பகுதிகளைக் கடந்துசெல்வதாய்க் கூறப்படுகிறது.

பல வாரங்களாக மியன்மாரில் வன்முறைச் சம்பவங்களும் அதிரடிச் சோதனைகளும் தொடர்கின்றன.

போராட்டங்களைக் கட்டுப்படுத்த அந்நாட்டு ராணுவம் எடுக்கும் கடுமையான எதிர்நடவடிக்கைகளுக்கு இந்தியாவும் தாய்லந்தும் கண்டனம் தெரிவிக்கவில்லை என்ற குறைகூறல்கள் தொடர்ந்து நிலவுகின்றன.

மியன்மாரில் இதுவரை சுமார் 600 பேர் மாண்டிருக்கலாம் என்று மனித உரிமைக் குழுக்கள் கணித்துள்ளன.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்