Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மியன்மாரில் முன்னணி நடிகர் கைது; 120 பிரபலங்களைத் தேடும் ராணுவம்

மியன்மாரில் ராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த முன்னணி நடிகர் ஒருவரை ராணுவம் கைது செய்திருக்கிறது.

வாசிப்புநேரம் -

மியன்மாரில் ராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த முன்னணி நடிகர் ஒருவரை ராணுவம் கைது செய்திருக்கிறது.

அத்துடன் 120 பிரபலங்களை அது தேடி வருகிறது.

தாய்லந்திலும் மியன்மாரிலும் பிரபலமாக உள்ள 24 வயது Paing Takho இன்று காலை கைது செய்யப்பட்டார்.

ராணுவத்திற்கு எதிரான போராட்டங்களில் நேரடியாகவும் சமூக ஊடகம் வழியாகவும் அவர் தீவிரமாகச் செயல்பட்டார்.

மியன்மாரில், பிப்ரவரி மாதம் முதல் தேதி ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து, அங்கு நாள்தோறும் பெரிய அளவில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.

500-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 2,500-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.

நாட்டில் மீண்டும் ஜனநாயக ஆட்சி இடம்பெற வேண்டும் என்றும் முன்னாள் அரசாங்க ஆலோசகரான திருவாட்டி ஆங் சான் சூச்சி (Aung San Suu Kyi) விடுதலை செய்யப்படவேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் போராடி வருகின்றனர்.

ராணுவத்தின் அடக்குமுறையை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளும் கண்டித்துள்ளன.

-AFP 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்