Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மியன்மார்: வேளாண்மையில் திறன்பேசிகள் ஏற்படுத்தும் எழுச்சி

மியன்மார் ஊழியர்களில் மூவரில் இருவர் விவசாயிகள்.

வாசிப்புநேரம் -

மியன்மார் ஊழியர்களில் மூவரில் இருவர் விவசாயிகள்.

பாரம்பரியமாகக் கற்றதைத் தவிர, விவசாயிகள் பலருக்கு சரியான வேளாண் நுட்பங்கள் பல தெரிவதில்லை.

ஆனால் அதற்குத் தீர்வாக அமைந்துள்ளது, திறன்பேசி.

இப்போது, திறன்பேசிச் செயலிகள் விவசாயிகளுக்கு முக்கியமான தகவல்களை உடனுக்குடன் வழங்குகின்றன.

வானிலை, பருவநிலை மாற்றம், விளையும் பயிரின் விலை உள்ளிட்ட பல பயனுள்ள தகவல்களைப் பயனீட்டாளர்களிள் கையில் தருகின்றன அந்தச் செயலிகள்.

விவசாயிகள் எங்கிருந்தாலும் ஒருவரோடு ஒருவர் கலந்துரையாடும் வசதியையும் திறன்பேசிச் செயலிகள் ஏற்படுத்தித் தருகின்றன.

'Green Way' என்னும் செயலி, அந்தக் கூறுகளைக் கொண்டுள்ளது.

ஒரு காலத்தில் வசதி படைத்தோரால் மட்டும் வாங்க முடிந்த சிம் அட்டையை இப்போது சாமானியராலும் வாங்க முடிகிறது.

மியன்மார் விவசாயிகளின் பொருளாதார நிலையில் பெரிய மாற்றமில்லை என்றாலும், வரும் நாட்களில் அது வளர்ச்சி காணும் வாய்ப்பை உருவாக்கியுள்ளன திறன்பேசிச் செயலிகள்.

"'Green way' செயலியைக் கிட்டத்தட்ட 70,000 விவசாயிகள் பதிவிறக்கம் செய்துள்ளனர்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்