Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மியன்மார்: பொட்டலத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது - 5 பேர் மரணம்

மியன்மார்: பொட்டலத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது - 5 பேர் மரணம்

வாசிப்புநேரம் -

மியன்மாரில், பொட்டலத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 5 பேர் மாண்டனர்.

பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ராணுவ எதிர்ப்பு இயக்கத்தில் இணைந்த காவல்துறை அதிகாரிகள் மூவரும் அவர்களில் அடங்குவர்.

மேற்கு பாகோவின் (Bago) கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் வெடிப்பு நேர்ந்தது.

நேற்றிரவு, மேலும் இரண்டு நகரங்களில் 5 பேர் மாண்டனர். அவர்களில் இருவர், மேக்வே (Magway) வட்டாரத்தில், மக்களுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.

மியன்மார் ராணுவத்தின் அடக்குமுறைக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

அதன் தொடர்பில் அனைத்துலக வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக மியன்மார் தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

இந்நிலையில், மேண்டலேயில்(Mandalay) அமைந்துள்ள ஆகாயப்படை தலைமையகத்தில் இருந்து வெளியேறிய அதிகாரிகள் சுமார் 80 பேருடன் தொடர்புகொள்ள முடியவில்லை என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

நூற்றுக்கணக்கான படையினர் ராணுவ எதிர்ப்பு இயக்கத்தில் சேர்ந்துகொண்டிருப்பதாய் நம்பப்படுகிறது.

-Reuters  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்