Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மியன்மார் பொதுத்தேர்தல்: ரக்கைன் மாநிலத்தில் 1.1 மில்லியனுக்கும் அதிகமானோர் வாக்களிக்கத் தடை

மியன்மார் பொதுத்தேர்தல்: ரக்கைன் மாநிலத்தில் 1.1 மில்லியனுக்கும் அதிகமானோர் வாக்களிக்கத் தடை

வாசிப்புநேரம் -
மியன்மார் பொதுத்தேர்தல்: ரக்கைன் மாநிலத்தில் 1.1 மில்லியனுக்கும் அதிகமானோர் வாக்களிக்கத் தடை

(படம்: AFP/Ye Aung Thu)

மியன்மாரின் ரக்கைன் மாநிலத்தில், 1.1 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்கள் எதிர்வரும் தேர்தலில் வாக்களிக்கத் தடை செய்யப்பட்டுள்ளனர்.

சர்ச்சை மிகுந்த ரக்கைன் மாநிலத்தில் பாதிக்கும் மேற்பட்ட வாக்களிப்பு நிலையங்கள் இனி் செயல்படாது என்று மியன்மார் அரசாங்கம் அறிவித்துள்ளது. 

குறிப்பிட்ட அந்த மாநிலத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மை அதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும், வாக்காளர்களுக்குத தடை விதிப்பது சர்ச்சையை இன்னும் மோசமான நிலைக்குத் தள்ளக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அண்மை ஆண்டுகளில் ரொஹிஞ்சா முஸ்லிம்கள்மீதான ராணுவத்தின் கடும் நடவடிக்கையால் மில்லியன்கணக்கானோர் பங்களாதேஷில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந்நிலையில்,ஆங் சான் சூச்சியின் (Aung San Suu Kyi) ஆளும் கட்சியே அடுத்த மாதத் தேர்தலில் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்