Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

"மியன்மாரில் வரும் மாதங்களில் 3.4 மில்லியன் பேர் வரை உணவுப் பொருள் வாங்கச் சிரமப்படுவார்கள்"

மியன்மாரில் உணவுப் பாதுகாப்பு குறித்த நெருக்கடி கணிசமாக அதிகரித்துள்ளது என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

வாசிப்புநேரம் -

மியன்மாரில் உணவுப் பாதுகாப்பு குறித்த நெருக்கடி கணிசமாக அதிகரித்துள்ளது என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மியன்மாரில் ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து பொருளியல் நெருக்கடி மோசமடைந்துள்ளது.

அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களில் 3.4 மில்லியன் பேர் வரை உணவுப் பொருள் வாங்கச் சிரமப்படுவார்கள் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் கணித்துள்ளது.

உற்பத்தி, கட்டுமானம், சேவை ஆகிய துறைகளில் வேலை இழப்பு அதிகமாவதால், நகர்ப் பகுதிகளில் வசிப்போர் மோசமாகப் பாதிக்கப்படுவர்.

மியன்மார் ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து சுமார் கால் மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

வார இறுதியில் நடைபெறவிருக்கும், ஆசியான் உச்சநிலைக் கூட்டத்தில் மியன்மார் ராணுவத் தளபதி மின் ஆங் லைன் (Min Aung Hlaing) கலந்து கொள்ளவிருக்கிறார்.

இந்நிலையில், ஐக்கிய நாட்டு நிறுவனம் உணவுப் பாதுகாப்பு குறித்து எச்சரித்துள்ளது.

இதற்கிடையே, மியன்மார் ராணுவத்துக்குப் பதிலாக, தன்னிச்சையாக அமைக்கப்பட்ட சிவிலியன் அரசாங்கப் பிரதிநிதிகளை உச்சநிலைக் கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று ஆசியானிடம் வலியுறுத்தப்படுகிறது.

ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட திருவாட்டி ஆங் சான் சூச்சியின் (Aung San Suu Kyi) அமைச்சரவை உறுப்பினர்கள், சிறுபான்மை இனத் தலைவர்கள் உள்ளிட்டோர் அந்த அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ளனர்.

- Reuters 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்