Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மியன்மார்: 'கிருமித்தொற்றால் ஒருவர் மாண்டார்' எனும் தவறான தகவலை வெளியிட்ட செய்தி ஆசிரியருக்கு 2 ஆண்டுச் சிறை

மியன்மாரில் கிருமித்தொற்றால் ஒருவர் மாண்டார் என்ற தவறான தகவலை வெளியிட்ட செய்தி ஆசிரியருக்கு 2 ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  

வாசிப்புநேரம் -
மியன்மார்: 'கிருமித்தொற்றால் ஒருவர் மாண்டார்' எனும் தவறான தகவலை வெளியிட்ட செய்தி ஆசிரியருக்கு 2 ஆண்டுச் சிறை

(படம்: AFP/Ye Aung Thu)

மியன்மாரில் கிருமித்தொற்றால் ஒருவர் மாண்டார் என்ற தவறான தகவலை வெளியிட்ட செய்தி ஆசிரியருக்கு 2 ஆண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Dae Pyaw என்னுன் இணையத்தளத்தின் தலைமை ஆசிரியரான ஜா யீ டெட் (Zaw Ye Htet) மே 13 ஆம் தேதி கிருமித்தொற்றால் ஒருவர் மாண்டதாக ஒரு செய்தியை வெளியிட்டார்.

கிழக்குப்புற காரென் மாநிலத்தில் அந்த மரணம் நேர்ந்ததாக அவர் செய்தி வெளியிட்டிருந்தார்.
ஆனால் அது தவறான தகவல் என்பது பின்னர் தெரியவந்தது.

அதனையடுத்து, செய்தி வெளியான அதேநாளில்
அவர் கைது செய்யப்பட்டார்.

அந்த வழக்கு தொடர்பான விசாரணையும் வழக்கத்துக்கு மாறாக ஒரே வாரத்தில் தொடங்கியது.

விசாரணையில், அந்த ஆடவருக்குச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

பொய்யான தகவல்களைப் பரப்புவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்றும் மியன்மார் எச்சரித்துள்ளது.

மியன்மாரில் இதுவரை 199-பேருக்கு மட்டுமே கிருமித்தொற்று இருப்பதாக அதிகாரத்துவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்கு 6 பேர் கிருமித்தொற்றால் மாண்டனர்.

இருப்பினும், கிருமித்தொற்றுக்கு எதிரான சோதனை குறைவானவர்களுக்கே நடத்தப்பட்டுள்ளது.

ஆகவே,கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உண்மையில் கூடுதலாகவே இருக்குமென கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்