Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மியன்மாருக்கான புதிய உதவித் திட்டங்களை நிறுத்த ஜப்பான் திட்டம்

மியன்மாருக்கான புதிய உதவித் திட்டங்களை நிறுத்தி வைக்க ஜப்பான் திட்டமிட்டுள்ளது.

வாசிப்புநேரம் -

மியன்மாருக்கான புதிய உதவித் திட்டங்களை நிறுத்தி வைக்க ஜப்பான் திட்டமிட்டுள்ளது.

மியன்மார் ராணுவம் அதனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவோர் மீது வன்முறை நடவடிக்கை மேற்கொள்வதைத் தடுக்கும் முயற்சியாக அது கருதப்படுகிறது.

மியன்மாருக்கான உதவித் திட்டங்களை நிறுத்தி வைப்பதற்கான தீர்மானத்தை அந்நாட்டின் ஆளுங்கட்சி வரைந்துள்ளது.

மியன்மாருக்கு மேம்பாட்டுக்கான புதிய உதவிகளை வழங்குவது குறித்து கவனமாகப் பரிசீலிக்குமாறு அரசாங்கத்தை அந்தக் கட்சி கேட்டுக்கொண்டது.

மியன்மாருக்குப் பொருளியல் ரீதியாக ஆகப் பெரிய அளவில் உதவி வழங்கும் நாடாக ஜப்பான் திகழ்கிறது.

2019ஆம் ஆண்டு அது மியன்மாருக்குச் சுமார் 1.8 பில்லியன் டாலர் நிதி உதவி வழங்கியிருந்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்