Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

"ஆங் சான் சூச்சியைச் சந்திக்க மியன்மாருக்கான ஆசியானின் சிறப்புத் தூதருக்கு அனுமதியில்லை"

மியன்மாருக்கான ஆசியானின் சிறப்புத் தூதர் எரிவான் யூசோஃப் (Erywan Yusof) , முன்னாள் அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூச்சியைச் (Aung San Suu Kyi) சந்திக்க அனுமதிக்கப்படமாட்டார் என்று அந்நாட்டின் ராணுவம் தெரிவித்துள்ளது.

வாசிப்புநேரம் -
"ஆங் சான் சூச்சியைச் சந்திக்க மியன்மாருக்கான ஆசியானின் சிறப்புத் தூதருக்கு அனுமதியில்லை"

படம்: Reuters

மியன்மாருக்கான ஆசியானின் சிறப்புத் தூதர் எரிவான் யூசோஃப் (Erywan Yusof) , முன்னாள் அரசாங்க ஆலோசகர் ஆங் சான் சூச்சியைச் (Aung San Suu Kyi) சந்திக்க அனுமதிக்கப்படமாட்டார் என்று அந்நாட்டின் ராணுவம் தெரிவித்துள்ளது.

திருவாட்டி சூச்சி மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதால் அந்த முடிவு எடுக்கப்பட்டதாக, ராணுவப் பேச்சாளர் ஸாவ் மின் துன் (Zaw Min Tun) குறிப்பிட்டார்.

ஆனால் திரு. எரிவான் மியன்மாருக்கு வருகைதர அனுமதிக்கப்படுவார் என்று அவர் கூறினார்.

ஐக்கிய நாட்டு நிறுவனமும் இதர நாடுகளும் அமைப்புகளும், அனைத்துலக விவகாரங்களில் ஈடுபடும்போது, ஒரே விதமான அணுகுமுறையைப் பின்பற்றவேண்டும் என்று திரு. ஸாவ் கேட்டுக்கொண்டார்.

ஆசியான், கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்ட 5 கட்ட அமைதித் திட்டத்தை மியன்மார் ராணுவம் இன்னும் நடைமுறைப்படுத்தவில்லை.

அதனால் இம்மாதம் இடம்பெறவிருக்கும் ஆசியான் மாநாட்டில் மியன்மாரைச் சேர்த்துக்கொள்ளாமல் இருப்பதுபற்றிச் சில உறுப்பு நாடுகள் பேசிவருவதாகத் திரு. எரிவான் சென்ற வாரம் கூறியிருந்தார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்