Images
  • Myanmar Parliament
    (படம்: REUTERS/ Poppy Mcpherson)

மியன்மார்: அரசமைப்பில் திருத்தங்கள் செய்யும் குழுவை அமைக்க பெரும்பான்மை வாக்களிப்பு

மியன்மாரில், அரசமைப்பில் திருத்தங்களை வரைவு செய்ய குழு ஒன்றை அமைக்க 67 விழுக்காட்டு சட்ட நிபுணர்கள் வாக்களித்துள்ளனர்.

அந்நாட்டின் ஆங் சான் சூ சியின் ஆளும் தேசிய ஜனநாயக லீக் கட்சி கடந்த வாரம் அவசரத் திட்டத்தை சமர்ப்பித்தது.

பதவிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் ஆளும் கட்சி அரசமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வர மேற்கொள்ளும் முதல் முயற்சி அது.

அதன் செல்வாக்கு குறைந்து வரும் வேளையில், அந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

இராணுவ ஆட்சியால் இயற்றப்பட்டு, தற்போது நடப்பில் இருக்கும் அரசமைப்பின் கீழ் இராணுவத்திற்கு நாடளுமன்றத்தில் 25 விழுக்காட்டு இடங்கள் கிடைக்க உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.

அந்த சட்டத்தை மாற்ற 75 விழுக்காடுக்கு மேல் ஆதரவு தேவைப்படுகிறது.



Top