Images
  • myanmar plane crush
    (படம்: AFP/YE AUNG THU)

மியன்மாரில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் மாண்டவர்களில், பிரபல பௌத்தப் பிக்கு ஒருவரும் அடங்குவார்

மியன்மாரில் ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதில் மாண்டவர்களில், பிரபல பௌத்தப் பிக்கு ஒருவரும் அடங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 90 வயது மதிக்கத்தக்க அவர் Zay Kone மடாலயத்தின் தலைமைப் பிக்குவாக இருந்தவர். கடந்த ஃபிப்ரவரி மாதம், மியன்மாரில் ஆட்சி கவிழ்க்கப்பட்ட அடுத்த நாள் ராணுவத் தலைவர் மின் அங் லேன் (Min Aung Hlain) அவரை நேரில் சென்று சந்தித்தார்.

நேற்று தலைநகர் நேப்பிடாவிலிருந்து புறப்பட்ட விமானம், (பியின் ஊ வின்) Pyin Oo Lwin நகரில் தரையிறங்கியபோது விபத்து நேர்ந்தது. அதில் குறைந்தது 12 பேர் மாண்டனர்.

ஒரு சிறுவனும் ராணுவத்தைச் சேர்ந்த ஒருவரும் உயிர் பிழைத்ததாக முதலில் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராணுவ அதிகாரி பின்னர் மாண்டதாகச் சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.

விமானத்தில் 6 ராணுவ வீரர்களுடன் 2 பௌத்தப் பிக்குகளும் 6 பக்தர்களும் இருந்தனர்.

புதிய பௌத்த மடாலயம் ஒன்றின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொள்ள அவர்கள் சென்றதாக நம்பப்படுகிறது.









 

Top