Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மியன்மார் ராணுவம் சுமார் 23,000 கைதிகளை விடுவித்துள்ளது

மியன்மார் ராணுவம் 23,000க்கும் அதிகமான கைதிகளை விடுவித்துள்ளது.

வாசிப்புநேரம் -

மியன்மார் ராணுவம் 23,000க்கும் அதிகமான கைதிகளை விடுவித்துள்ளது.

ஒவ்வோர் ஆண்டும், வழக்கமாகப் புத்தாண்டை முன்னிட்டு கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்படும். அந்த வழக்கத்தைப் பின்பற்றுவதாக ராணுவத் தரப்பினர் குறிப்பிட்டனர்.

விடுவிக்கப்பட்டோரில் 130 பேர் வெளிநாட்டவர்கள்.

விடுவிக்கப்பட்டோரில், திருவாட்டி ஆங் சான் சூச்சியின் கட்சியைச் சேர்ந்தோர் உள்ளனரா என்பது குறித்துத் தகவல்கள் இல்லை.

நேற்று மியன்மாரில் பாரம்பரியப் புத்தாண்டு தொடங்கியது.

ஆனால், கொண்டாட்ட உணர்வைவிட ஜனநாயகத்துக்காகக் குரல் கொடுப்பதில் மக்கள் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

சிறைச்சாலையில் இப்போது மேலும் இடங்கள் காலியாக இருப்பதால் போராட்டங்களின் தொடர்பில் 800க்கும் அதிகமானோரை அந்நாட்டு ராணுவம் தேடிவருவதாய் நம்பப்படுகிறது.

அவர்களில் சிலர் இணையப் பிரபலங்கள், பாடகர்கள் நடிகர்கள் எனக் கூறப்படுகிறது. ராணுவத்தின் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக அவர்கள் குரல் கொடுத்தவர்கள்.

பிப்ரவரி மாதம் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பை அடுத்து, மியன்மாரில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்கின்றன.

இதுவரை 700க்கும் அதிகமானோர் போராட்டங்களில் மாண்டதாகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்