Images
  • myanmar 1
    (படம்: REUTERS/Shwe Paw Mya Tin)

மியன்மார்: அரண் அமைத்து வட்டாரங்களைக் கிருமிப்பரவலிலிருந்து பாதுகாக்கும் மக்கள்

மியன்மாரில் COVID-19 கிருமித்தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், தலைநகர் யங்கோனில் மக்கள் தங்கள் வட்டாரங்களைச் சுற்றி தடைகளை (barricade) உருவாக்கியுள்ளனர்.

இதன் மூலம் கிருமி பரவுவதைத் தடுக்க முடியும் என்பது நம்பிக்கை.


(படம்: REUTERS/Shwe Paw Mya Tin)

இரும்புத் துண்டுகள், மரப்பலகைகள் போன்றவற்றால் அவர்களின் பாதுகாப்பு அரண்கள் உருவாக்கப்பட்டுள்ளன.


(படம்: REUTERS/Shwe Paw Mya Tin)

வடகொரியாவுக்கும் தென்கொரியாவுக்கும் இடையில் உள்ள எல்லையைப் போல சில வட்டாரங்கள் காட்சியளிக்கின்றன.

அரண் அமைத்து மக்கள் தங்கள் வட்டாரத்தை 'குட்டி தேசங்களாக' உருமாற்றி வருவதாய்ச் சிலர் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டனர்.


(படம்: REUTERS/Shwe Paw Mya Tin)

உள்ளூர் அரசாங்கத்தின் அனுமதியின்றி தடைகள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றுள் சிலவற்றை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

மியன்மாரில் இதுவரை 2,652 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 15 பேர் நோயால் மாண்டனர்.


(படம்: REUTERS/Shwe Paw Mya Tin)

நேற்று பதிவுசெய்யப்பட்ட 180 கிருமித்தொற்றுச் சம்பவங்களில், 124 சம்பவங்கள் யாங்கோனில் பதிவானவை.



 

Top