Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

குப்பைகளைக் கொட்டி வெறுப்பைக் காட்டும் மியன்மார் ஆர்ப்பாட்டக்காரர்கள்

மியன்மாரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் புதிய உத்தியைக் கையாளத் தொடங்கியுள்ளனர்.

வாசிப்புநேரம் -
குப்பைகளைக் கொட்டி வெறுப்பைக் காட்டும் மியன்மார் ஆர்ப்பாட்டக்காரர்கள்

(படம்: Reuters/Dawei Watch)

மியன்மாரில் ஆர்ப்பாட்டக்காரர்கள் புதிய உத்தியைக் கையாளத் தொடங்கியுள்ளனர்.

அவர்கள் தலைநகர் யங்கூனின் முக்கியத் தெருக்களில் குப்பைகளைக் கொட்டி தங்கள் வெறுப்பைக் காட்டி வருகின்றனர்.

சமூகத் தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள படங்களில் யங்கூன் சாலைகளில் குப்பைகள் குமிவது தெரிகின்றது.

இதற்கிடையில், குப்பைகளைச் சரியாக அப்புறப்படுத்துமாறு நகரின் சில பகுதிகளில் ஒலிபெருக்கியில் சொல்லப்பட்டது.

தற்காப்பு அமைச்சுக்குச் சொந்தமான தொழிற்சாலைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஊழியர்களும் அந்த ஒத்துழையாமை நடவடிக்கையில் சேர்ந்துகொண்டுள்ளனர்.

மியன்மாரில் மாண்டோர் எண்ணிக்கை 500ஐத் தாண்டிய நிலையில் ஆர்ப்பாட்டக்கார்ரகள் புதிய உத்தியைக் கையாள்கின்றனர்.

- Reuters/zl 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்