Images
  • myanmar (11)
    (படம்:REUTERS/Athit Perawongmetha)

தாய்லந்துக்குள் தஞ்சம் புகும் மியன்மார் சிறுப்பான்மையினர்


மியன்மாரின் கேரன் (Karen) மாநிலத்தில் வசிக்கும் ஆயிரக்கணக்கான கிராமவாசிகள், தாய்லந்துக்குள் தஞ்சம் புகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியன்மார் ராணுவத்துக்கும் கேரன் கிளர்ச்சியாளார்களுக்கும் இடையில் பூசல் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.

ஆயிரக்கணக்கான கிராமவாசிகள், சல்வீன் (Salween) ஆற்றுக்கு அருகே தற்காலிகமாகத் தங்கியிருப்பதாகக் கேரன் அமைதி ஆதரவுக் கட்டமைப்பு தெரிவித்தது.

இந்த வாரம் மட்டும் கிட்டத்தட்ட 200 கிராமவாசிகள் தாய்லந்துக்குள் நுழைந்திருப்பதாகத் தாய்லந்து அதிகாரிகள் கூறினர்.

சல்வீனின் மேற்குக் கரையோரத்தில் விடியற்காலையில் ஏற்பட்ட கலவரத்தில் கேரன் கிளர்ச்சியாளர்கள், மியன்மார் ராணுவ வீரர்களைத் தாக்கியதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்தக் கலவரத்தில் 13 படைவீரர்களும் 3 கேரன் கிளர்ச்சியாளர்களும் கொல்லப்பட்டனர்.

அதற்குப் பதிலடியாக மியன்மார் ராணுவம், தாய்லந்தின் எல்லைகளுக்கு அருகே பல இடங்களில் ஆகாயத் தாக்குதலை நடத்தியது.

அதன் காரணமாகத் தாய்லந்தின் எல்லைகளில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.

- Reuters

Top