Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சிங்கப்பூர்-மலேசிய விரைவுச்சாலையில் விபத்து - மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட எழுவர்

சிங்கப்பூரையும், மலேசியாவையும் இணைக்கும் இரண்டாவது விரைவுச்சாலையில், நேற்று நடந்த விபத்தையடுத்து, மோட்டார்சைக்கிளோட்டிகள் 7 பேர், மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

வாசிப்புநேரம் -
சிங்கப்பூர்-மலேசிய விரைவுச்சாலையில் விபத்து - மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட எழுவர்

படம்: TODAY

சிங்கப்பூரையும், மலேசியாவையும் இணைக்கும் இரண்டாவது விரைவுச்சாலையில், நேற்று நடந்த விபத்தையடுத்து, மோட்டார்சைக்கிளோட்டிகள் 7 பேர், மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

மழைக்கு ஒதுங்கி சுரங்கப்பாதை ஒன்றில் அவர்கள் நின்றுகொண்டிருந்தனர்.

சிங்கப்பூரிலிருந்து ஜொகூர் பாருவுக்குக் காரில் சென்றுகொண்டிருந்த 52 வயது சிங்கப்பூர் ஆடவர், அவர்களை மோதியதாகக் காவல்துறை கூறியது.

தேங்கியிருந்த தண்ணீரில் காரைச் செலுத்திய ஆடவர், பின்னர் காரின் கட்டுப்பாட்டை இழந்ததாக அதிகாரிகள் கூறினர்.

சம்பவம் நேற்று மாலை 5 மணியளவில் நடந்ததாக மலேசிய ஊடகங்கள் தெரிவித்தன.

மோட்டார்சைக்கிளோட்டிகள் இலேசான காயங்களுடன் சுல்தானா அமினா (Sultanah Aminah) மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்