Images
  • Najib (1)
    படம்: AP/YC Hiam

திரு. நஜிப் மீதான நீதிமன்ற விசாரணை அடுத்த ஆண்டு பிப்ரவரி 12 தொடக்கம்

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீதான வழக்கு விசாரணை அடுத்த ஆண்டு பிப்ரவரி 12இலிருந்து 28 வரையிலும் பின்னர் மார்ச் 4இலிருந்து 29 வரையிலும் நடைபெறும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.

திரு. நஜிப்பின் ஊழல் வழக்குப் பற்றி ஊடகங்களும் பொதுமக்களும் விவாதிக்கக்கூடாது என்ற உத்தரவைக் கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இதற்கு முன் அகற்றியது.

நேற்று முன்தினம், திரு. நஜிப் மீது கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியதன் தொடர்பில் 3 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

1MDB நிதி மோசடியுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் அவை.

1MDBயின் முன்னைய கிளை நிறுவனமான SRC Internationalஇல் இருந்து, சுமார் 10 மில்லியன் டாலர் தொகை, திரு. நஜிப்பின் சொந்த வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

திரு. நஜிப் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துவருகிறார்.



Top