Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஊடகமோ,பொதுமக்களோ வழக்கு குறித்து கலந்துரையாடுவதற்குத் தடைவிதிக்க திரு. நஜிப் மேல்முறையீடு

இன்று மதியம் மேல்முறையீட்டுக்கான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரியின் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டதென்று வழக்குரைஞர் முகம்மது ஷாஃபி அப்துல்லா கூறினார்.

வாசிப்புநேரம் -
ஊடகமோ,பொதுமக்களோ வழக்கு குறித்து கலந்துரையாடுவதற்குத் தடைவிதிக்க திரு. நஜிப் மேல்முறையீடு

(படம்:REUTERS/Lai Seng Sin)

மலேசியாவில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் வழக்கு குறித்து ஊடகமோ பொதுமக்களோ கலந்துரையாடக்கூடாது என்ற தடை நீக்கப்பட்டதை எதிர்த்து, அவரது வழக்குரைஞர்கள் மேல்முறையீடு செய்துள்ளனர்.

இன்று மதியம் மேல்முறையீட்டுக்கான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரியின் அலுவலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டதென்று வழக்குரைஞர் முகம்மது ஷாஃபி அப்துல்லா கூறினார்.

புத்ராஜெயா மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும்.

கடந்த வாரம் திரு. நஜிப்பின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

பேச்சுரிமையை அது பாதிப்பதாக நீதிபதி கூறியிருந்தார்.

தகவலை வெளியிடுவதில் வரம்புமீறுவோருக்கு எதிராகச் சட்டங்கள் இருப்பதும் வலியுறுத்தப்பட்டது.

65 வயது திரு. நஜிப் மோசடி, கள்ளப்பணத்தை நல்ல பணமாக்குதல், அதிகார முறைகேடு போன்றவை தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்