Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

1MDB தணிக்கை அறிக்கையில் மாற்றம் செய்ததாகக் குற்றச்சாட்டு - மறுக்கிறார் நஜிப்

பிரதமாக இருந்தபோது அவர் கையூட்டுப் பெற்றதாகவும் ஒழுங்குமுறை நடவடிக்கையையும் குற்றவியல் நடவடிக்கையையும் தவிர்ப்பதற்கு முயற்சி செய்ததாகவும் கூறப்பட்டது.

வாசிப்புநேரம் -
1MDB தணிக்கை அறிக்கையில் மாற்றம் செய்ததாகக் குற்றச்சாட்டு - மறுக்கிறார் நஜிப்

(படம்: AFP/Mohd RASFAN)

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி 1MDB தணிக்கை அறிக்கையில் முறையற்ற திருத்தம் செய்ததாகப் பதிவான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

பிரதமாக இருந்தபோது அவர் கையூட்டுப் பெற்றதாகவும் ஒழுங்குமுறை நடவடிக்கையையும் குற்றவியல் நடவடிக்கையையும் தவிர்ப்பதற்கு முயற்சி செய்ததாகவும் கூறப்பட்டது.

2016ஆம் ஆண்டு பிரதமர் அலுவலகத்தில் திரு. நஜிப் அந்தக் குற்றங்களைப் புரிந்ததாக நம்பப்படுகிறது. 

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுவரை சிறைத் தண்டனையும் அவர் பெற்றதாகச் சந்தேகிக்கப்படும் கையூட்டைவிட ஐந்து மடங்கு அதிகமான அபராதமும் விதிக்கப்படலாம். 

தணிக்கை அறிக்கையில் முறையற்ற திருத்தம் செய்யப்பட்டதற்குத் திரு.நஜிப்பிற்கு அவர் துணைபோனதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. 

திரு. நஜிப்பிற்கும் திரு. அருளுக்கும் 500,000 ரிங்கிட் பிணை வழங்கப்பட்டிருக்கிறது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்