Images
  • Najib 1MDB
    (படம்: AFP/Mohd RASFAN)

மலேசியா: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீதான 1MDB ஊழல் விசாரணை மீண்டும் தொடங்கியது

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீதான 1MDB ஊழல் விசாரணை, இன்று மீண்டும் தொடங்கியது.

அவரது தற்காப்புத் தரப்பினர் COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற காரணத்தால் சென்ற மார்ச் மாதம் விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

1MDB நிதி மோசடி தொடர்பில் அவர்மீது 40க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதன் தொடர்பில்^ திரு. நஜிப் மீதான 25 குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை இன்று தொடங்கியது.

அவர் சுமார் 480 மில்லியன் டாலரைக் கையூட்டாகப் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அரசாங்க நிதியிலிருந்து திருடப்பட்ட^ 248 மில்லியன் டாலரைப் பெற்றதாக நம்பப்படும் ரிஸா அஸிஸ் சென்ற வாரம் தீர்ப்பு ஏதும் வழங்கப்படாமல் விடுதலை செய்யப்பட்டார்.

அவர் திரு. நஜிப்பின் வளர்ப்பு மகன்.

அதன் தொடர்பில் பிரதமர் முஹிதீன் யாசினின் அரசாங்கம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.


Top