Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வரி செலுத்தத் தவறியதன் தொடர்பில் நொடிப்புநிலையை எதிர்நோக்கும் நஜிப் ரசாக்

வரி செலுத்தத் தவறியதன் தொடர்பில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் (Najib Razak) நொடிப்புநிலையை எதிர்நோக்கக் கூடும்.

வாசிப்புநேரம் -
வரி செலுத்தத் தவறியதன் தொடர்பில் நொடிப்புநிலையை எதிர்நோக்கும் நஜிப் ரசாக்

(கோப்புப்படம்: Lim Huey Teng)

வரி செலுத்தத் தவறியதன் தொடர்பில் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் (Najib Razak) நொடிப்புநிலையை எதிர்நோக்கக் கூடும்.

அவர் 2011-ஆம் ஆண்டுக்கும் 2017-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் 1.69 பில்லியன் ரிங்கிட் வரியைச் செலுத்தத் தவறியதாகக் கூறப்படுகிறது.

அதனைச் செலுத்தும்படி நீதிமன்றம் கடந்த ஆண்டு அவருக்கு உத்தரவிட்டிருந்தது.

அதனை அடுத்து, வரி, மற்ற கட்டணங்கள் ஆகியவற்றுக்குப் பணம் செலுத்தவில்லை என்றால், நொடிப்புநிலை தொடர்பான நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டனர்.

நொடிப்புநிலை அறிவிக்கப்பட்டால், திரு. நஜிப், தம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்துவிடுவார்.

தேர்தல்களில் போட்டியிடுவதற்கும் தடை விதிக்கப்படும்.

இருப்பினும், தாம் எப்போதும் வரியைச் செலுத்தியதாகவும், தம் மீதான வழக்கு, அரசியல் ரீதியான நோக்கங்களைக் கொண்டுள்ளது என்றும் திரு. நஜிப் கூறிவருகிறார்.

அவருக்கு ஏற்கனவே 1MDB ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

திரு. நஜிப்பும் அவருடன் சேர்ந்து பணியாற்றியவர்களும் நேர்மையற்ற முறையில் பில்லியன்கணக்கான டாலர் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

-AFP/zl 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்