Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டம்: நஜிப் கேள்வி

கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டம் ரத்து செய்யப்பட்டால், அதனால் ஏற்படக் கூடிய பொருளியல் பாதிப்புகளைப் பற்றி மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், திரு. அஸ்மின் அலியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

வாசிப்புநேரம் -
கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டம்: நஜிப் கேள்வி

(படம்: Sumisha Naidu)

கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டம் ரத்து செய்யப்பட்டால், அதனால் ஏற்படக் கூடிய பொருளியல் பாதிப்புகளைப் பற்றி மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், திரு. அஸ்மின் அலியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அந்த ரயில் திட்டத்தைப் பலரும் எதிர்பார்த்தனர் என்றும் அதன் மூலம் ஏற்படக்கூடிய பொருளியல் தாக்கம் பற்றியும் உருவாகக்கூடிய வேலைவாய்ப்புகள் பற்றியும் அரசாங்கம் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் திரு. நஜிப் கூறினார்.

அந்த ரயில் திட்டத்தால் அரசாங்கத்திற்குக் கிட்டத்தட்ட 110 பில்லியன் ரிங்கிட் செலவாகும் என்றும் அது முன்னர் மதிப்பிடப்பட்ட தொகையை விட அதிகம் என்று அமைச்சர் அஸ்மின் தெரிவித்தார்.

தற்போது எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள திரு. நஜிப், அந்த ரயில் திட்டத்திற்கான அனைத்துலகக் குத்தகைகள் இவ்வாண்டு டிசம்பர் மாதம் தான் நிறைவுபெறுவதால் தொகை குறித்து வினா எழுப்புவதாகக் கூறினார்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்