Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

1MDB சர்ச்சைக் குறித்த விசாரணைக்காக 2ஆவது முறையாக மலேசியாவின் ஊழல் தடுப்பு ஆணையத்திற்குச் சென்றிருக்கிறார் திரு. நஜிப்

1MDB சர்ச்சைக் குறித்த விசாரணைக்காக இன்று (24 மே) 2ஆவது முறையாக மலேசியாவின் ஊழல் தடுப்பு ஆணையத்திற்குச் சென்றிருக்கிறார் முன்னாள் பிரதமர் திரு. நஜிப் ரசாக்.

வாசிப்புநேரம் -
1MDB சர்ச்சைக் குறித்த விசாரணைக்காக 2ஆவது முறையாக மலேசியாவின் ஊழல் தடுப்பு ஆணையத்திற்குச் சென்றிருக்கிறார் திரு. நஜிப்

(படம்: Mohd RASFAN/AFP)

1MDB சர்ச்சைக் குறித்த விசாரணைக்காக இன்று (24 மே) 2ஆவது முறையாக மலேசியாவின் ஊழல் தடுப்பு ஆணையத்திற்குச் சென்றிருக்கிறார் முன்னாள் பிரதமர் திரு. நஜிப் ரசாக்.

செவ்வாய்க்கிழமையன்று ஊழல் தடுப்பு ஆணையத்திடம் பல மணி நேரத்துக்குப் பதிலளித்த திரு. நஜிப், இன்று அவரின் வங்கிக் கணக்கிற்கு சந்தேகத்திற்குரிய வகையில் மாற்றிவிடப்பட்ட 42 மில்லியன் ரிங்கிட் பற்றி விளக்கம் அளிக்கவிருக்கிறார்.

மலேசியாவின் ஊழல் தடுப்பு ஆணையத் தலைவரான முகமது ஷுக்ரி அப்துல், திரு. நஜிப்பை SRC International தொடர்பாக விசாரிக்கவே ஆணையத்திற்கு அழைக்கப்பட்டார் என்றும் அவரைக் கைது செய்வதற்காக இல்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

1MDB முதலீட்டு நிறுவனத்தின் துணை நிறுவனமான SRC International திரு. நஜிப்பின் முன்னாள் அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டது.
 
விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்