Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

1MDB ஊழல் : முன்னாள் பிரதமர் நஜிப் மீதான வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீதான பல மில்லியன் டாலர் 1MDB நிதி ஊழல் தொடர்பில் இன்று நடைபெறவிருந்த வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

வாசிப்புநேரம் -
1MDB ஊழல் : முன்னாள் பிரதமர் நஜிப் மீதான வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

(படம்: AFP/Mohd Rasfan)

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீதான பல மில்லியன் டாலர் 1MDB நிதி ஊழல் தொடர்பில் இன்று நடைபெறவிருந்த வழக்கு விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அவர் எதிர்நோக்கும் ஐந்து வழக்குகளில் இரண்டாவது வழக்கிற்கான விசாரணை இன்று நடைபெறவிருந்தது. அதற்காக அவர் இன்று காலை நீதிமன்றம் சென்றிருந்தார். ஆனால் விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.

S-R-C International தொடர்பான முதல் விசாரணை நிறைவடைந்த பின்னர் இரண்டாவது விசாரணை நடைபெறலாம் என்று திரு. நஜிப்பின் வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

S-R-C International தொடர்பான விசாரணை நிறைவுபெறாத நிலையில் இன்றைய விசாரணை நடைபெறாமல் போகலாம் என்று அரசாங்க வழக்குரைஞரும் கூறியிருந்தார்.

திரு. நஜிப்பின் தற்காப்புத் தரப்பிற்கு சென்ற வெள்ளிக்கிழமைதான் சாட்சிகளின் அறிக்கைகள் கொடுக்கப்பட்டன.

விதிமுறைகளின்படி அவற்றைப் படித்துப் புரிந்துகொள்வதற்கு இரண்டு வார அவகாசம் தரப்பட்டுள்ளது.

இருப்பினும் இன்றைய விசாரணையை நடத்துவதா வேண்டாமா என்பதை உயர்நீதிமன்ற நீதிபதி முடிவுசெய்வார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்