Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

நஜிப் மீதான வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீதான விசாரணையை அந்நாட்டு நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

வாசிப்புநேரம் -
நஜிப் மீதான வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

(படம்: Reuters)

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீதான விசாரணையை அந்நாட்டு நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

திரு. நஜிப் மீது வெவ்வேறு நீதிமன்றங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மாற்றுவதன் தொடர்பில் அவருடைய வழக்குரைஞர்கள் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.

அதைத் தொடர்ந்து நாளை தொடங்கவிருந்த விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. அது எப்போது தொடங்கும் என்பதை
நீதிமன்றம் உறுதி செய்யவில்லை.

1MDB அரசாங்க நிதி தொடர்பான ஊழலில் திரு. நஜிப், பில்லியன் கணக்கான டாலர் மோசடி செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், தம் மீதான குற்றச்சாட்டுகளை திரு. நஜிப் மறுத்து வருகிறார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்