Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

ஜப்பான்: பேரரசர் நருஹித்தோ அதிகாரப்பூர்வமாய் அரியணை ஏறவுள்ளார்

ஜப்பானிய பேரரசர் நருஹித்தோ (Naruhito) இன்று அதிகாரப்பூர்வமாய் அரியணை ஏறவுள்ளார்.

வாசிப்புநேரம் -
ஜப்பான்: பேரரசர் நருஹித்தோ அதிகாரப்பூர்வமாய் அரியணை ஏறவுள்ளார்

(படம்: Behrouz MEHRI/AFP)


ஜப்பானிய பேரரசர் நருஹித்தோ (Naruhito) இன்று அதிகாரப்பூர்வமாய் அரியணை ஏறவுள்ளார்.

சிங்கப்பூர் நேரப்படி நண்பகல் 12 மணி வாக்கில், நாட்டு மக்களுக்கு அவர் உரையாற்றுவார்.

அதை தொடர்ந்து, ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபே (Shinzo Abe) பேரரசருக்கு வாழ்த்துரை வழங்குவார்.

அண்மையில் ஜப்பானை புரட்டிப் போட்ட ஹகிபிஸ் (Hagibis) சூறாவளீயில் 80 பேர் மாண்டதைத் தொடர்ந்து மக்களுக்கான நிவாரண நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகிறது.

அதனால், பேரரசர் அரியணை ஏறியபின் நடைபெறும் கொண்டாட்ட அணிவகுப்பு அடுத்த மாதம் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பல நூற்றாண்டுகளாய்ப் பின்பற்றப்படும் முடிசூட்டு சடங்கில் 180 நாடுகளைச் சேர்ந்த சுமார் ஈராயிரம் பிரமுகர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்